வெறுப்புணர்வை மறந்து ஒன்றிணையுங்கள்: ஜேர்மன் அதிபர்

வெறுப்புணர்வை மறந்து ஒன்றிணையுமாறு ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் செம்னிட்ஸ் நகர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மன் நகரான செம்னிட்ஸில் கடந்த மூன்று மாதங்களாக குடியேற்றவாசிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வன்முறைகள் வெடித்துள்ளன.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதிக்கு ஜேர்மன் அதிபர் விஜயம் செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்நாட்டின் இறையாண்மையை எவ்விதத்திலும் குறைக்க முடியாது. எமது சொந்த சட்டங்களை தொடர எமக்கு உரிமை உண்டு.

எமது தினசரி நிகழ்ச்சி நிரலுக்குள் வெறுப்புணர்வை தூண்டுபவர்களாலேயே நாம் எண்ணுவதை செய்ய முடியாதுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை மேலும் வலுப்பெறுவதை நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

ஒரு மில்லியன் குடியேற்றவாசிகள் அதிலும் பெரும்பாலும் முஸ்லிம் குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பான ஜேர்மன் அதிபரின் 2015 தீர்மானத்தை தொடர்ந்தே செம்னிட்ஸ் நகரில் வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !