Main Menu

வெனிஸ் நகரில் விரைந்து வெள்ளத் தடுப்பு பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை!

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரில் விரைந்து வெள்ளத் தடுப்பு பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் நகரை பார்வையிட்டதன் பின்னர் இத்தாலிய பிரதமர் கியூசெப் கான்டே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது வெனிஸ் நகரம். இதனை சுற்றிலும் கால்வாய்கள் உள்ளன.

அண்மையில் வரலாறு காணாத வெள்ளம் வெனிஸ் நகரை சூழ்ந்தது. இதனால் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தன.

தற்போது வெனிஸ் நகரின் நீர் மட்டம் 1.87 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில், திடீர் வெள்ளம் பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு என நகர மேயர் லூய்கி புருக்னேரோ தெரிவித்துள்ளார்.