வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடை

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ ((Juan Guaidó) விற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளதுடன் அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ தம்மைத் தாமே அறிவித்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை நிலையினையடுத்து, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற சபாநாயகருமான ஜூவான் குவைடோவை அங்கீகரித்திருந்தன.

மேலும் எதிர்வரும் 8 நாட்களுக்குள் தேர்தலுக்கு அழைப்பு விடுக்காத பட்சத்தில் குவைடோவையே ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதாக குறித்த நாடுகள் அறிவித்துள்ள நிலையில் ; குவைடோவுக்கு எதிராக பயணத்தடை மற்றும் வங்கி கணக்கு முடக்கம் என்பனவற்றுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !