வெனிசுவேலா விடயத்தில் அமெரிக்காவிற்கு ஏமாற்றம்: ஜனாதிபதி

தன்னை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ஏமாற்றமடைந்துள்ளதாக வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி நிறுவனமொன்றிற்கு நேற்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, வெனிசுவேலா மீது பொருளாதார தடைகளை விதித்தமை தொடர்பாக அமெரிக்காவை கண்டித்தமைக்கு மதுரோ, ரஷ்யாவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”நான் அரசியலமைப்பு ரீதியாக நாட்டின் தலைவராக விளங்குகிறேன். அதன்படி எனது தலைமைத்துவத்தை பயன்படுத்தி வருகிறேன். என்னை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

ஆனால், அனைத்து மட்டங்களிலும் ரஷ்யாவின் பூரண ஆதரவு எனக்குள்ளது. அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்நிலையில், எம்முடன் நிரந்தர தொடர்பை பேணுமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோருகிறேன்.

இதேவேளை, வெனிசுவேலா சட்ட அமைப்பிற்கு உட்பட்ட எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் மதிக்க நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !