வெனிசுவேலா முன்னாள் நீதிபதி அமெரிக்காவிற்கு தப்பியோட்டம்!

வெனிசுவேலா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிறிஸ்டியன் ஸேர்பா அமெரிக்காவிற்கு தப்பியோடியுள்ளார்.

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, எதிர்வரும் 10ஆம் திகதி தமது இரண்டாவது தவணைக்காலத்தை உத்தியோகபூர்வாக ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியன் ஸேர்பா, தற்போது அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றிபெற்றாலும், அத்தேர்தல் நீதியானதும் போட்டிகள் அற்றதுமென அமெரிக்காவின் புளோரிடா வானொலி சேவைக்கு அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, உயர்நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட்டு அவற்றை கட்டுப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

தானும் தனது குடும்பத்தாரும் அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக சென்றடைய வேண்டும் என்ற காரணத்தினாலேயே, தேர்தல் நேரத்தில் விமர்சனங்களை முன்வைக்கவில்லையென கிறிஸ்டியன் ஸேர்பா மேலும் கூறியுள்ளார்.

எனினும், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை தவிர்ப்பதற்காகவே தப்பிச் சென்றுள்ளார் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் நடத்தப்பட்ட வெனிசுவேலா தேர்தல் நியாயமற்றதென உலக நாடுகளும் விமர்சித்து வந்தன. குறிப்பாக 14 நாடுகள் தமது தூதுவர்களை மீள அழைத்துக்கொண்டன. வெனிசுவேலா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இதேவேளை, வெனிசுவேலாவில் அதிகரித்துச்செல்லும் விலைவாசி மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !