வெதுப்பகத்தில் பாரிய வெடிப்பு – 12பேர் வரை படுகாயம் – 4பேர் பலி

இன்று சனிக்கிழமை காலை 9 மணி அளவில் பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்று வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
கட்டிடத்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியது மட்டுமில்லாமல், வீதியின் ஓரத்தில் நின்றிருந்த வகனங்களும் சேதமடைந்தன. ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள Rue Trévise வீதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. எரிவாயு கசிவினால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ஜன்னல்கள் சிலவும் வெடித்து சிதறியுள்ளன.
அப்பகுதிக்குள் நுழையவும், வாகங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 36பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12பேர் வரை படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.இவர்களுள் தீயணைப்பு படைவீரர் இருவர் உட்பட 4பேர் வரை உயிரிழந்துள்ளனர்
தீ ஓரளவுக்கு  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.200 வரையான தீயணைப்பு வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சம்பவ இடத்தில் நின்றிருந்தவர்கள் பலர் அலறல் சத்தம் கேட்பதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தை பிரதமரும் உட்துறை அமைச்சரும் பார்வையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !