வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலத்தில் சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு இன்று பரீசீலணைக்கு எடுத்துக் கொண்ட போது, இந்த குற்றச்சாட்டுக்களில் தான் நிரபராதி என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், எதிர்வரும் பெப்பரவரி மாதம் 19 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !