வீட்டை ஒரு போதும் மறப்பதில்லை – வீடுகள் தந்த உங்களையும் மறக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்
நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்காலும் முளைக்கின்றது.
ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் உள்ள வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (8) இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் பல அமைச்சர்களிடம் பேசினோம். உதவி கோரினோம். ஆனாலும் செயலாற்ற கூடிய ஏழைகளுக்கு செயலாற்ற கூடிய அமைச்சர் சஜித் பிரமதாஸவும் உண்மையை கூற வேண்டுமானால் எங்களுடைய மனங்களில் வீடு தந்த நீங்கள் இருக்கின்றீர்கள்.
ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தெரிவிக்கப் படுகின்ற போது எங்கள் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள்.
அத்துடன் தோட்டவெளி கிராமத்தில் வீட்டுதிட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் வீடுகள் தேவையானவர்கள் இருப்பதனால் அவர்களுக்கும் வழங்க முன்னவர வேண்டும் என கோரிக்கையாக விடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் நீங்கள் எங்களுக்கு வீடு தந்திருக்கின்றீர்கள் நாங்கள் வீடுகளை ஒரு போதும் மறப்பதில்லை அதே போன்று வீடுகளை தந்த உங்களையும் மறக்கமாட்டோம் என மேலும் தெரிவித்தார்.