வீட்டைச் சுத்தம் செய்த போது கிடைத்த எதிர்பாராத அதிர்ஷ்டம்!

அமெரிக்காவில் இந்த வாரம் கொண்டாடப்பட்டும் ‘நன்றி தெரிவிக்கும்’ நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த அதிர்ஷ்ட லாப சீட்டின் மூலம் ஒரு தம்பதிக்கு 1.8 மில்லியன் டொலர் மதிப்பில் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது எதேச்சையாக சில அதிர்ஷ்ட லாப சீட்டுகள் கிடைத்தாக டினா எரென்பெர்க் என்ற பெண் தெரிவித்தார்.

கிடைத்த அதிர்ஷ்ட லாப சீட்டுகளை ஆராய்ந்து பார்த்த போது, அதில் இருந்த ஒரு சீட்டுக்கு 1.8 மில்லியன் டாலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய்) பரிசு கிடைத்துள்ளமை தெரியவந்ததாக அந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிர்ஷ்ட லாப சீட்டுகள் காலாவதியாவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் நெகிழ்வுடன் தெரிவித்தனர். இந்த விடயம் அவர்களின் நண்பர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !