வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் உரிமையாளர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரிழப்பு!

வடக்கு லண்டனில் கெம்டன் பகுதியில் உள்ள மாடி வீடொன்றிற்குள் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்ததை அடுத்து, வீட்டில் இருந்த நபர் ஒருவர் மூன்றாம் மாடியின் யன்னல் வழியாக வௌியே பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

49 வயதான ஷெய்கு அடம்ஸ் என்பவர் பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை 23:56 அளவில் மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

ஆயுதம் ஏந்திய இரண்டு பேர் அவரை பலவந்தப்படுத்தியதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !