வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா
நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ”144 தடை உத்தரவை மதிக்காமல் பலர் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசு உத்தரவை கடைபிடிக்காத காரணத்தினாலேயே இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன. நேரம் போகவில்லை என்று சொல்லாதீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
பிடித்த வேலைகளை செய்யுங்கள். வீட்டிற்கு உள்ளேயே அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எனவே வீட்டுக்குள்ளேயே இருப்போம். ஆரோக்கியமாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.