வீடியோ கேம்களால் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்: ஆய்வில் தகவல்

வீடியோ கேம்களை (Video Games) விளையாடுபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எளிதாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம், குறிப்பாக ரிமைன்டர்கள் கொண்ட கேம்களை விளையாடினால் மன அழுத்தத்தை எதிர்கொள்ள முடியும் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 160 மாணவர்கள் 21 வயதிலேயே குறைந்த அளவு மன அழுத்தத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதில் நான்கில் மூன்று பேர் பெண்கள் என்றும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஆறு நிமிடம், மூன்று நிமிடம் என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வீடியோ கேம்களை விளையாடும் போது மன அழுத்தத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலினுள் ஏற்படும் உயிரியல் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்ற ரீதியில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேம்களை விளையாடும் போது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், இந்த முடிவுகள் தற்காலிகமானது தான் என்றும் இவற்றில் நீண்டகால பயன்கள் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !