விஷால் – அனிஷா திருமணம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஷால் அனிஷாவுடன் திருமணம் என அவரது டுவிட்டர் பக்கத்தில்  அதிகாரபூர்வ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த விஷால், “எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருந்தோம். இருவருக்கும் காதல் வசப்பட்டது.

எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்துவிட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண திகதியை முடிவு செய்வார்கள்.

நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்” என்று கூறினார்.

அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகள் ஆவார். அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் தற்போது வெளியாகிவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !