விளையாட்டுத்துறையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது – பிரதமர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாத்தறை கொட்டவில விளையாட்டரங்களில் நேற்று பிற்பகல் ஆரம்பமான 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

விளையாட்டை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் தனித்துவ அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுக்கு இன, மத பேதங்கள் கிடையாது. இலங்கையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக அரச மட்டத்தில் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

நாடு முழுவதும் விளையாட்டு அபிவிருத்திக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !