Main Menu

விளாடிமிர் புதின் இந்தியா வருகை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இதில் இருநாட்டு வெளியுறவு, மற்றும் இராணுவ அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.