வில்லாரியலை 3-2 என வீழ்த்தி முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் ரியல் மாட்ரிட்

முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் வில்லாரியல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் டிரிகரஸ் 50-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் அந்த அணியின் பகாம்பு மேலும் ஒரு கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.


வில்லாரியல் அணி வீரர் கோல் அடிக்கும் காட்சி

0-2 என பின்தங்கிய நிலையில் ரியல் மாட்ரிட் ஆக்ரோஷமான தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் கராத் பேலே தலையால் முட்டி கோல் அடித்தார். வலது பக்கம் கார்னருக்கு சற்று முன்பக்கத்தில் இருந்து டேனியல் கார்வாஜல் தூக்கியடித்த பந்தை பேலே கோலாக்கினார்.


கோல் அடித்த மகிழ்ச்சியில் ரியல்மாட்ரிட் வீரர்கள்

74-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்ற, ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது. 83-வது நிமிடத்தில் ரியல் மாட்ரி்ட் மேலும் ஒரு கோல் அடித்தது. மார்சிலோ தூக்கியடித்த பந்தை மொராட்டா தலையால் முட்டி கோலாக்கினார்.


பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடிக்கும் ரொனால்டோ

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ரியல் மாட்ரிட் 3-2 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லா லிகா புள்ளிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட் 23 போட்டிகள் முடிவில் 55 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பார்சிலோனா 24 போட்டிகளில் 54 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. செவில்லா 52 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !