விமான விபத்தில் ஜேர்மனியர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஜேர்மனியர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.

இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த விமான விபத்தில் ஜேர்மனியர்களும் உயிரிழந்திருக்கலாம் என ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த விமானத்தில் எத்தனை ஜேர்மனிய பிரஜைகள் பயணித்தார் என்ற விடயம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எத்தியோப்பிய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதுதொடர்பாக உறுதிப்படுத்தி உத்தியோகப்பூர்வமான அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !