விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே அண்மையில் சர்வதேச விமான பயணங்களை ஜெட் ஏர்வேஸ் முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான ஓட்டுநர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் ஜனவரி மாதம் முதல் தங்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. அதை திருப்பி அளிக்கும் வரை வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
ஜெட் ஏர்வேஸ் அளிக்க வேண்டிய கடன் தொகை மற்றும் நிதி பற்றாக்குறையை சரி செய்து விமான சேவையை தொடர்ந்து வழங்க எஸ்.பி.ஐ ஒப்புக்கொண்டது. இதற்கு மாற்றாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலிடம் உள்ள பங்குகளை எஸ்.பி.ஐ பெற்றுள்ளது.
நிதி சிக்கலை தீர்க்க எஸ்.பி.ஐ வங்கி இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாயை உடனே அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த நிதி வரும் வரை கூட ஜெட் ஏர்வேஸ் தாக்குபிடிக்காது.
விமான எரிபொருள் கட்டணம் மட்டுமே 7,000 கோடி ரூபாய் வரை ஜெட் ஏர்வேஸ் நிலுவை வைத்துள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க வேண்டும், விமான வாடகை கட்டணங்களை அளிக்க வேண்டும் என்ற சிக்கலிலும் ஜெட் ஏர்வேஸ் உள்ளது. எஸ்.பி.ஐ 1,500 கோடி ரூபாய் இடைக்கால நிதியை அளித்தாலும் இதில் எந்த செலவுகளை எல்லாம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் சமாளிக்க முடியும் என்றும் தெரியவில்லை.
நட்டம் மற்றும் கடனில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க எஸ்.பி.ஐ தவிர எந்த ஒரு வங்கி நிறுவனங்களும் முன்வரவில்லை. அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே எஸ்.பி.ஐ இந்த விவாகரத்தில் தலையிட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸிடம் 44 விமானங்கள் உள்ள நிலையில் தற்போது 7 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தலாமா என்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன மீட்புக்குழு திட்டமிட்டுள்ளது.
எனவே பங்குகள் இன்றைய சந்தை நேர முடிவில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 19.95 புள்ளிகள் சரிந்து 241.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.