Main Menu

விமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை தெஹ்ரான் மறுக்கிறது

உக்ரேனிய பயணிகள் விமானம் தெஹ்ரானில் இருந்து கையவ் நோக்கிப் புறப்பட்டபோது ஈரான் ஏவுகணைத் தாக்குதலினால் வெடித்துச் சிதறியதாக மேற்குலகம் கூறுவதை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது.

ஈரான் விமானப்போக்குவரத்துப் பிரிவின் தலைவர் விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக இன்று கூறினார்.

மேற்குலகத் தலைவர்களின் கூற்றுகளுக்கு அவர் பதிலளித்தபோது, விமானம் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அது தவறாக இருக்கலாம் என்று கூறினார்.

தெஹ்ரானில் இருந்து விமானம் பறந்தபோது விமானம் மீது ஏவுகணை ஒன்று தாக்குவது போன்று காணொளி வெளியாகியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களிலேயே உக்ரைன் இன்ரர்நஷனல் எயார்லைன்ஸ் விமானம் PS752 தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

பயணிகள் விமானத்தை ஈரான் ஒரு போர் விமானம் என்று கருதித் தாக்கியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...