விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம்!
தாய்லாந்தில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீதியை கடக்கும் போது வாகனம் மோதி உயிரிழக்கும் சம்பவம் அண்மைக்காலமாக தாய்லாந்தில் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் அதனை குறைக்கும் வகையில் வீதியில் முப்பரிமாண வீதிக்கடவை வரையப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களும், தன்னார்வ ஊழியர்களும் இணைந்து அதிகளவில் விபத்து இடம்பெறும் இடங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்பாக இவை வரையப்பட்டுள்ளன.
வீதிகளில் திடீரென மிதப்பது போன்ற தன்மையை கண்டதும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வேகத்தை குறைப்பார்கள்.
இதன்மூலம், விபத்துகள் குறையும் என போக்குவரத்து அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பகிரவும்...