விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்!

சன்ரிங்காம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணிடம், கோமகன் பிலிப் மன்னிப்புக் கோரியுள்ளார்.

காயமடைந்த பெண் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி சன்ரிங்காம் பகுதியில் கோமகன் பிலிப் பயணித்த கார், எதிரே வந்த மற்றுமொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில், எதிரே வந்த காரை செலுத்திய பெண் சிறிது காயங்களுக்கு உள்ளானர். காரிலிருந்த அவரது 9 வயது குழந்தை உயிரித்தப்பியது. எனினும், 46 வயதான அவருடைய தாய் மணிக்கட்டு உடைவுக்கு உள்ளானார்.

இந்நிலையில், கோமகன் பிலிப் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.  கடிதத்தை பெற்ற குறித்த பெண்மணி, மிகவும் உணர்வுபூர்வமான அனுபவம் எனக் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !