விந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்!
அனுமதியின்றி சொந்த ஆண் விந்தைக் கொண்டு பெண்களைக் கருவுறச் செய்த டச்சுக் (Dutch) கருவள மருத்துவர் 49 பிள்ளைகளுக்குத் தந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈராண்டுகளுக்குமுன் மாண்ட ஜான் கர்பாட் நெதர்லந்திலுள்ள தனது மருந்தகத்திற்கு வந்த பெண்களின் அனுமதியின்றி தனது விந்தைக் கொண்டு அவர்களைக் கருவுறச் செய்திருக்கிறார்.
அவர்களில் சில சிறுவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமைகளின் அடிப்படையில் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதன் தொடர்பில் கர்பாட் மீது 2017இல் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகளின் முடிவுகள் தினங்களிற்கு முன் வெளியிடப்பட்டன.
தந்தையின் அடையாளம் இறுதியில் தெரிந்தது குறித்து அமைதியடைவதாக சிறுவர்களில் சிலர் கூறினர்.