விதிமுறைகளை மீறி அரசு பணத்தில் ரூ.26 லட்சத்தை கொடுத்து சொகுசு கார் வாங்கிய கீதாலட்சுமி!

அப்போது பல ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி விதிகளை மீறி அதிக விலைக்கு சொகுசு கார் வாங்கி இருப்பது தெரியவந்தது. அவர் கடந்த ஆண்டு துணை வேந்தராக பதவி ஏற்ற போது, அவரது பயன்பாட்டுக்காக டொயோட்டா அல்டிஸ் கார் வழங்கப்பட்டது.

அந்த கார் துணை வேந்தருக்காகவே 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டதாகும். 11 மாதமே ஆகிஇருந்த அந்த காரை துணைவேந்தர் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது.

கீதாலட்சுமிக்காக புதிய கார் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டொயோட்டா பார்ச்சுனர் கார் வாங்கப்பட்டது. அந்த சொகுசு காரின் விலை ரூ.26 லட்சத்து 29 ஆயிரமாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் இந்த சொகுசு கார் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் சுமார் 1 மாதம் கழித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதிதான் அந்த கார் வாங்குவதற்கு ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கேட்கப்பட்டதற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் இது தெரிய வந்துள்ளது.

பொதுவாக அரசு உயர் அதிகாரிகளுக்கு வாகனம் வாங்க அதிகபட்சமாக ரூ.14 லட்சம் வரை அரசு பணத்தை செலவிடலாம் என்று தமிழக அரசு விதிகளை வரையறுத்துள்ளது. ஆனால், அந்த விதிமுறைகளை மீறி துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு அரசு பணத்தில் சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழக அரசு வரையறுத்துள்ள விதிகளை மீறி கூடுதலாக 10 லட்சம் ரூபாய் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கூடுதல் செலவு செய்து துணைவேந்தருக்கு சொகுசு கார் வாங்குவதற்கு சுகாதார அமைச்சகத்தின் நிதிக்குழுவும், ஆட்சி மன்றக் குழுவும் கடும் ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்தன.

என்றாலும் அந்த ஆட்சேபனையை மீறி ரூ.26 லட்சத்துக்கு கார் வாங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், வி.ஐ.பி.க்கள் யாருக்குமே இவ்வளவு செலவில் பார்ச்சுனர் கார் வாங்கப்படவில்லை.அமைச்சர்களையும் விட துணை வேந்தருக்காக அந்த சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !