விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, ‘அமெரிக்காவின் ஹீரோ’ – டிரம்ப் புகழாரம்

தன் வாழ்க்கையை விண்வெளி ஆராய்ச்சிக்காக முழுவதுமாக அர்ப்பணித்த இந்திய வம்சாவளி பெண் கல்பனா சாவ்லா, ‘அமெரிக்காவின் ஹீரோ’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.

விண்வெளி துறைக்கு எண்ணற்ற பணிகளை ஆற்றியுள்ள அவர், அமெரிக்காவின் ஹீரோ’. மில்லியன் கணக்கான அமெரிக்க பெண்களுக்கு, சாவ்லா முன்னுதாரணமாக திகழ்கிறார். அவரின் தைரியமும், ஆர்வமும் அமெரிக்க பெண்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் புகழ்ந்து பேசினார்.

கடந்த 2003ம் ஆண்டில், கொலம்பியா விண்கலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்ற கல்பனா சாவ்லா விண்கலம் வெடித்து உயிரிழந்தார். அவருடன் சேர்த்து அவரது குழுவினர் 7 பேரும் இச்சம்பவத்தில் பலியாகினர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !