விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைக்குத் திரும்பும் 12 மில்லியன் மாணவர்கள்!

கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு, நாளை திங்கட்கிழமை நாடு முழுவதும் 12 மில்லியன் மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்புகின்றனர்.
இரண்டு மாத கால இடைவெளியின் பின்னர் ஆரம்பக்கல்வி மாணவர்கள், உயர்தர மாணவர்கள் என அனைவரும் மீண்டும் திங்கட்கிழமை வகுப்புகளுக்குத் திரும்புகின்றனர். முன்னதாக வெள்ளிக்கிழமை 8,80,000 ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வகுப்பு நேரங்கள் உள்ளிட்ட பல அட்டவணைகளை தயாரிப்பதற்காக அவர்கள் வெள்ளிக்கிழமையே பணிக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், விடுமுறை காலத்தின் போது, அரசு தரப்பில் பல்வேறு மாற்றங்களை பாடசாலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. CP வகுப்புக்களுக்கு தலா 12 மாணவர்கள் (ஒரு வகுப்புக்கு) என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1-3 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மாத்திரமே பாடசாலை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !