விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களை தேடி, அகழ்வு பணிகள்

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களை தேடி, அகழ்வு பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் காவற்துறையினர் அதற்கான பணிகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி காந்திபுரம் பிரதேசத்தில் கடந்த வாரம் இரவு புதையல் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தகவலறிந்த காவற்துறையினர் குறித்த பகுதிக்கு சென்ற நிலையில், சந்தேகத்துக்குரியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், முன்னர் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாக தெரியவந்ததையடுத்து, அங்கு ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் அந்த பகுதியில் இதுவரை எந்த விதமான ஆயுதங்களும் மீட்கப்படவில்லை எனவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !