விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இருவர் சுட்டுக் கொலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் உட்பட இருவர் ஈரான் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஈரான் எல்லைக்குள் நுழைய முயற்சித்தவேளை பேரம்பலன் மல்தியாளன் மற்றும் விஜயகுமார் பிரசான் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள சட்டவிரோத ஆட்கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் வழங்கி, பிரிட்டனுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் ஈரானிய எல்லையின் ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இதுவரையும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !