விஜய் மல்லையாவின் 100 கோடி ரூபா பெறுமதியான வீடு பறிமுதல்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 100 கோடி ரூபா பெறுமதியான பண்ணை வீடு அமலாக்கத்துறை பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை நேற்று (வியாழக்கிழமை) அமலாக்கத்துறை அதிகரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் கோடிக் கணக்கில் பணத்தை பெற்ற மல்லையா மீள செலுத்தாது நாட்டை விட்டு தப்பி சென்று இலண்டனில் தஞ்சம் புகுந்தார்.

இதனையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மராட்டிய மாநிலம் ரெய்காட் மாவட்டம் அலிபாக் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி வைத்தது.

இந்த தற்காலிக முடக்கத்தை எதிர்த்து, விஜய் மல்லையா கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனம் தொடர்ந்த மனுவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

பின்னர், குறித்த வீட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து, வீட்டின் சுவர் மீது வீட்டை பறிமுதல் செய்யதமை தொடர்பான அறிவிப்பு சுவரொட்டியை ஒட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த வீட்டின் மதிப்பு 25 கோடி ரூபாய் என பத்திரப்பதிவில் குறிப்பிட்டிருந்த போதிலும் அதன் பெறுமதி 100 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !