விஜய்சேதுபதியின் திரைப்படத்தில் அறிமுகமாகிறார் லியோனியின் மகன்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள மாமனிதன் திரைப்படத்தின் மூலம் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்மதுரை திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி மூன்றாவது முறையாக இணையும் இந்த திரைப்படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரின் மகனான லியோ சிவகுமார் இணையவுள்ளார்.

குறித்த தகவலை இயக்குனர் சீனு ராமசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா என மூன்றுபேர் இசையமைக்கவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !