Main Menu

விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்

விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாநகர காவல் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சாலையோரமாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் – தியாகராஜன்விஜயகாந்த் நடித்த மாநகர காவல், பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை இயக்கியவர் தியாகராஜன். மாநகராக காவல் படம் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 150-வது படமாகும்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர் டி.எப்.டி. படித்து முடித்து முதல் படமாக மாநகர காவல் என்ற படத்தை எடுத்தார். இந்திராகாந்தி கொலையை மையமாக வைத்து வந்த இந்தப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு பிரபு நடித்த பாக்சிங் சண்டையை மையமாக வைத்து வெற்றி மேல் வெற்றி என்ற படத்தை எடுத்தார்.
இவர் திருமணம் முடிந்து மகன், மகள் இருவருடனும் ஏ.வி.எம். காலனியில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு சிகிச்சைக்கு போதுமான பண வசதி இல்லாமல் கஷ்டத்தில் இருந்தார்.

இன்று காலை ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரிலேயே சாலையோரமாக உயிரிழந்த நிலையில் அவர் உடலைக் கண்டு ஆம்புலன்சுக்கு சிலர் போன் செய்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தியாகராஜன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.