விஜயகாந்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதியில் இருந்து மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார். ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க திட்டமிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் சென்றனர். விஜயகாந்துடனான சந்திப்பின்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோரும் இருந்தனர்.

மக்களவை தேர்தலில், தொகுதி ஒதுக்கீடில் நீடிக்கும் சிக்கலை களைது தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதி பட்டியல் இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !