விக்கி சம்பந்தன் பாராமுகம் காட்டுகின்றனர்: ஆனந்த சுதாகர் தாயார் குற்றச்சாட்டு

ஆனந்த சுதாகர் விடுதலை தொடர்பில் வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக கூறுகின்றனர்.

இருப்பினும் அவரது விடுதலை தொடர்பில் கதைப்பதாக கூறுகின்றனரே தவிர இதற்கான முடிவை வழங்கவில்லை என அவரது தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நவோதயா மக்கள் முன்னணி சார்பில் கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தங்களுடன் வந்து பேசவில்லை என்று கூறிய அவர், நவோதய மக்கள் முன்னணியின் தலைவரே தற்போது அழைத்து பேசியதாகவும் உதவிகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !