விக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்!

விக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைகளை கைவிடப் திட்டமிட்டுள்ளதாக ஸ்வீடனின் பொது வழக்குகள் இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தைவிட்டு வெளியேறினால் தாம் கைது செய்வோம் என்று பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Julian Assange மீதான பிடியாணை உத்தரவை கைவிட வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் ஸ்வீடனை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஸ்டோக் ஹோம் நீதிமன்றம் அது குறித்த ஆய்வு செய்துவருகின்றது.  இந்நிலையில், மேற்படி வழக்கு விசாரணையை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் அமைந்துள்ள ஈகுவடோர் தூதரகத்தில் Julian Assange தங்கியுள்ளார். சுவீடனுக்கு செல்லவேண்டி ஏற்படின் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படலாம் என்பதே அவருடைய அச்சமாக உள்ளது.

ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் நடத்திய அட்டூழியங்கள் குறித்த நான்கு இலட்சம் இரகசிய ஆவணங்களை Julian Assange கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  வெளியிட்டிருந்தார். அத்துடன், ஆப்கானில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த இரகசிய ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்தான குற்றச்சாட்டுக்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !