“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். யாழ் தீவகம் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26.07.2018 வியாழக்கிழமை மாலை டென்மார்க்கில் காலமானார். என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். கடந்த சில மாதங்களாக அவர் கடும் சுகயீனமடைந்திருந்தார். இறுதிவரை தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஒரு நொடி தாமதியாது உழைத்த பெருமகனார் தன் வாழ்வின் கடைசி நொடி வரை போராடினார். தள்ளாத வயதிலும் தமிழுக்காகவும், தமிழின விடிவுக்காகவும் பாடுபட்டவர், சைவத்திற்காக பாடுபட்டு அவர் செய்த சேவைகளை யாரால் ஆற்ற முடியும். இனி நிரப்ப ஆளில்லாத இடத்தை விட்டு சென்றுள்ளார்.. இறக்கும் போது அவருக்கு வயது 79 அவருடைய 80 வது வயது நிறைவை பேரெடுப்பில் நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் எம்மையெல்லாம் … Continue reading “வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்