வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 18 பேர் பலி – 50 பேர் காயம்

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டதுடன் அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி பலரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !