Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 286 (04/04/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 286 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 25, 36

இடமிருந்து வலம்

01 – 04 இருப்பிடம் என்றும் வரையறுக்கலாம்

08 – 11 கொள்ளளவை மீறியது

13 – 14 குறிஞ்சி நிலம் சார்ந்தது (வலமிருந்து இடம்)

21 – 23 நுழைவிற்கான ஆரம்பம் (வலமிருந்து இடம்)

28 – 30 தமிழர் வாழ்வியல், வழிபாட்டு முறைகளுடன் இணைந்தது (குழம்பி வருகிறது)

31 – 33 புவியின் சுழற்சியால் வேறுபடக்கூடியது (குழம்பி வருகிறது)

34 – 35 பன்மைக்குரிய விகுதி

மேலிருந்து கீழ்

01 – 13 தற்பொழுது ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலை குல விளையாட்டாக கொண்ட நிலத்திணை

13 – 19 எழுது தாளாக பயன்பட்ட இதனை செய்தியை பொறுத்து வகைப்படுத்தினர் (கீழிருந்து மேல்)

14 -32 தொல்லிசை தோற்கருவி

03 – 21 தலை இடை கடை என சங்க கால புலவர்களால் பிரிக்கப்பட்டது

21 – 33 உடலின் எவ்வகைப் பாதிப்புகளையும் இதற்கான பயிற்சி மூலம் குணப்படுத்தலாம் என சித்த வைத்தியம் கூறுகின்றது (குழம்பி வருகிறது)

16 – 34 ஐம்பொன்னின் பயன்பாடு கொண்டது (கீழிருந்து மேல்)

05 – 17 மழைக்கான காரணியாகவும் உள்ளது (குழம்பி வருகிறது)

06 – 30 சரும பராமரிப்பிற்கும் சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது

TRT தமிழ் ஒலி · KURUKKEZHUTHU PODDI – 286 (04.04.2021)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 285 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன்    அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 285 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 புகைப்படம்

07 – 09 உண்மை

11 – 12 கரு

16 – 18 நாக்கு

20 – 22 சாரல்

32 – 33 நூறு

33 – 35 கயிறு

மேலிருந்து கீழ்

01 – 25 புண்ணியம்

08 – 26 உதிரம்

21 – 27 சாலை

22 – 34 உயில்

17 – 35 கணக்கு

06 – 30 நெருக்கம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 285 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திரு.திக்கம் நடா, சுவிஸ்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 285 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!