Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 282 (28/02/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 282 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 15, 31

இடமிருந்து வலம்

01 – 05 தெய்வத்தின் வரம் நாடும் பக்தர்களும் உச்சரிப்பது

பாடல்: கடைக்கண்ணாலே – படம்: பூமி

08 – 09 துரோகம் இழைத்துப் போகும் மனிதர்களுடனும் ஒப்பிடுவர்

பாடல்: இதயா இதயா – படம்: தள்ளிபோகாதே

21 – 23 ஒற்றுமை கூட இதனுள் வரையறுக்கப்படும் (குழம்பி வருகிறது)

பாடல்: நெஞ்சமுண்டு (MGR Song) – படம்: நாற்காலி

26 – 29 பெரும்பாலும் எதிர்பார்ப்புகளுடனேயே அமைவது

பாடல்: பேசாத மொழியே – படம்:கொம்பு வச்ச சிங்கம்டா

32 – 34 ஒரு விடயத்தை முழுமையாக ஆராய்ந்து விமர்சித்தல் எனவும் கூறலாம் (வலமிருந்து இடம்)

பாடல்: யாழா – படம்: லாபம்

34 – 36 உறவுகளுக்கிடையே அமையும் போது புரிந்துணர்வுக்கானது

பாடல்: தீராநதி – படம்: மாறா

மேலிருந்து கீழ்

01 – 13 மேலைத்தேய இனத்துவேச செயற்பாடுகளின் அடிப்படையுள் ஒன்று

பாடல்: என்ன தவம் செய்தேன் – படம்: தள்ளிபோகாதே

13 – 25 இலக்கண முறைமையின் கீழ் சொற்றொடர் ஒன்றின் பொருளை உணர்த்தும் காரணங்களுள் ஒன்று (கீழிருந்து மேல்)

பாடல்: யார் அந்த ஓவியத்தை – படம்: களத்தில் சந்திப்போம்

02 – 08 பெறுவதும் கொடுப்பதுமான இதுபற்றி சிந்திக்கவும் வைக்கும் (கீழிருந்து மேல்)

பாடல்: யார் அழைத்தது – படம்: மாறா

14 – 26 மதங்களின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு பெயரிடப்படுவதுண்டு (கீழிருந்து மேல்)

பாடல்: காத்தோடு காத்தானேன் – படம்: ஜெயில்

04 – 22 மரபணுப்பரிசோதனைக்கான மாதிரி எடுக்க உதவும் பகுதி

பாடல்: கையிலே ஆகாசம் – படம்: சூரரைப் போற்று

22 – 34 தொடர்ந்தும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது (கீழிருந்து மேல்)

பாடல்: வானம் இறங்கி – படம்: அன்பிற்கும் உண்டோ

11 -29 வளங்களுள் ஒன்று எனவும் குறிப்பிடலாம்

பாடல்: ஆலங்காலங்குருவி – படம்: புலிக்குத்தி பாண்டி

12 – 36 அகம் புறம் சார்ந்த விடயங்களை எடுத்துரைக்கும் சரித்திரம்

பாடல்: யம்மாடியம்மா – படம்: புலிக்குத்தி பாண்டி

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 282 (28.02.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 281 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால்   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 281 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 விளையாட்டு

07 – 11 சந்தேகம்

11 – 12 கலை

13 – 15 கவிதை

19 – 22 பந்தம்

31 – 36 இரகசியம்

மேலிருந்து கீழ்

01 – 13 விந்தை

13 – 25 சந்தை

09 – 33 கற்பகம்

10 – 28 சந்தம்

11 – 17 கண்

23 – 35 புயல்

18 – 36 எண்ணம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 281 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் , ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் , ஜேர்மனி
திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 281 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!