Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 268 (23/08/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 268 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 20

இடமிருந்து வலம்

01 – 06 நாட்டு மக்களுக்கிடையேயான ஒற்றுமையை பிரதிபலிக்கக் கூடியதாக நோக்கப்படுவது
08 – 12 தீவினைகள் தீர்ப்பதாலேயே இப்பெயரால் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது (குழம்பி வருகிறது)
13 – 15 ஒருவரைத் தூற்றுவதற்கான மரபுத்தொடர் ஒன்றுடனும் தொடர்புடையது (குழம்பி வருகிறது)
25 – 27 இடைச்சொல்லாகவும் உள்ளது
31 – 35 நாட்டுப்புற இசையான இது வினா விடை போன்றும் அமையும் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 07 பல்வேறு நாட்டுக் கலாச்சார திருமணங்களின் போது பயன்படுத்தப்படுபவற்றுள் ஒன்று
13 – 31 களங்கம் விளைவிக்கக் கூடியது (குழம்பி வருகிறது) பாடலில் வரும் வினைச்சொல் ஒன்றினுள் விடை உள்ளது
03 – 27 புராணங்களில் தெய்வங்களின் ஆசனம் (குழம்பி வருகிறது) பாடலில் ஒத்த கருத்துள்ள சொல் வருகிறது
16 – 28 லயிப்பின் முடிவு உள்மன உத்வேகம்
11 – 35 குழந்தைகளின் உடல் உள தொடர்பான அனைத்து அம்சங்களும் இதன் போதே தீர்மானமாகும் (குழம்பி வருகிறது)
18 – 36 புவி சார்ந்த பொதுவான கருத்தான இதனை இஸ்லாமியர்கள் மதரீதியாகவும் ஏற்றுக் கொண்டனர்

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 268 (23.08.20)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 267 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ஜமுனா குகன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 267 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 மேட்டுக்குடி
07 – 10 துன்பம்
13 – 14 இமை
16 – 18 கேள்வி
20 – 23 மருந்து
26 – 28 பொருள்
31 – 33 முல்லை

மேலிருந்து கீழ்

01 – 13 மேன்மை
13 – 25 உண்மை
14 – 26 இருள்
23 – 35 துயில்
06 – 12 நொடி
18 – 36 விதானம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 267 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பாரதி, ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 267ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!