Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 262 (12/07/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 262 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 15, 31, 35

இடமிருந்து வலம்

01 – 06 நாடுகளுக்கிடையேயானால் புலனாய்வு மூலம் பெறப்படும் இதனை பாதுகாக்க தவறுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்

08 – 11 வாழ்க்கையுடன் ஒப்பிடப்படுவதுண்டு (குழம்பி வருகிறது)

20 – 23 அநீதிகள் நிகழும் போதெல்லாம் பலருக்கும் ஏற்படுவது (குழம்பி வருகிறது)

25 – 28 இஸ்லாமிய பாரம்பரியத்திலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டது

29 – 30 நிழல் தரும்

32 – 34 எமது பாரம்பரிய வழக்குகளுள் ஒன்றான இது ஆரம்ப காலத்தில் குலச்சின்னங்களின் வடிவமாகவே அமைந்துள்ளன

மேலிருந்து கீழ்

01 – 19 மனித வாழ்வியல் முறைகளுள் ஒன்றான இது வள்ளுவத்திலும் பிரிக்கப்பட்டுள்ளது

02 – 14 இதனுடன் வஞ்சனை இணைந்தால் பாரபட்சம் எனலாம் (குழம்பி வருகிறது)

26 – 32 வரையறுக்கப்பட்ட விழாக்களுள் ஒரு வகை (கீழிருந்து மேல்)

04 – 22 காதலுக்குரியதாக கருதப்படும் இது புரட்சிகரமான கொள்கையுடையவர்களுக்கும் பொருந்தும்

17 – 23 வாஸ்துவிற்கான அடிப்படை அம்சங்களுள் பிரதானமானது (கீழிருந்து மேல்)

06 – 24 புவி வெப்பமடைந்து அதிக நீர் ஆவியாவதன் விளைவு (கீழிருந்து மேல்)

30 – 36 நாட்டுக்கு நாடு நட்புறவு பாராட்டவும் பயன் படுத்தப்பட்டுள்ளது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 262

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 261 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி .
திருமதி ஏஞ்சல் மார்சலின்
அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 261 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 நளபாகம்

08 – 12 அனுபவம்

20 – 22 தேடல்

26 – 27 வலி

32 – 33 காது

மேலிருந்து கீழ்

13 – 31 சங்கிலி

08 – 20 அயல்

20 – 32 காவல்

04 – 22கண்டம்

22 – 34 புடவை

05 – 23 அரவம்

23 – 35 அருவி

06 – 30 பூகம்பம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 261 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.பாரதி ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 261ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!