Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 260 (28/06/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 260 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் –27

இடமிருந்து வலம்

01 – 06 உள்ளத்தை ஈர்க்கும் உவமைகள் பொதிந்த கவிதை நூல்

08 – 12 வலுவூட்டல் எனவும் பொருள் தரும் (குழம்பி வருகிறது)

15 – 18 இதன் தோற்றம் பற்றி விஞ்ஞானமும் ஆன்மீகமும் வெவ்வேறு கோட்பாடுகளை கொண்டுள்ளன (வலமிருந்து இடம்)

19 – 22 மேலைத் தேசத்தில் இந் நிறமானது அலட்சிய போக்கு, உறுதியற்ற தன்மை முதுமை, சலிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது

22 – 24 முயற்சிக்கான வித்தாக பலருக்கும் அமைவது (குழம்பி வருகிறது)

28 – 29 மறை முகப் போருக்கான சொல்

31 – 35 மனித மேம்பாட்டுக்கான பொழுதுபோக்கிற்கானவற்றுள் ஒன்று

மேலிருந்து கீழ்

07 – 19 மறைக்கப்பட்ட மனித குணம் வெளிப்படும் போது பயன் படுத்த கூடிய சொல் (கீழிருந்து மேல்)

19 – 31 தமிழ் இலக்கணத்தில் உள்ள எழுத்து வகைகளுள் ஒன்று

08 – 26 பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் வரையறுக்கப்பட்ட பருவங்களுள் ஒன்று (குழம்பி வருகிறது)

16 – 28 குறிக்கப்பட்ட மணி நேரங்களைக் கொண்டதான இது உலகில் ஒரு சில பகுதிகளில் நீண்ட நாட்களைக் கொண்டதாகவும் உள்ளது (குழம்பி வருகிறது)

06 – 18 இதன் கருமைக்கு காரணம் மண்ணீரலின் பலவீனம் என்று கருதப்படுகிறது (கீழிருந்து மேல்)

24 – 36 சமயக் கோட்பாடுகளுடனும் தொடர்புடைய இது பற்றிய நம்பிக்கை, பலருக்கும் வெவ்வேறாக அமையும் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · வானொலி குறுக்கெழுத்துப்போட்டி 260

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 259 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 சிக்கி முக்கி

15 – 16 தூது

19 – 22 சிரிப்பு

25 – 27 அம்பு

31 – 33 பொட்டு

மேலிருந்து கீழ்

01 – 19 சிறப்பு

08 – 26 கொழுப்பு

04 – 16 முத்து

11 – 23 பத்து

23 – 25 பச்சை

18 – 36 வள்ளல்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 259ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

செல்வி.அஞ்சனா குகன் சுவிஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

திரு.கனகசுந்தரம், யேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 259ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!