Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 259 (05/04/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 259 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 09, 12, 28, 34

இடமிருந்து வலம்

01 – 06 மனித குல வளர்ச்சியின் ஆரம்ப நிலையை நினைவு படுத்துவது
15 – 16 புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அதிகம் பேசப்படும் இது தொடர்பில் திருக்குறளில் தனியொரு அதிகாரமும் உள்ளது
19 – 22 மிக மிக பழமையான காலத்தில் இதனை பயத்தின் அறிகுறி என அறிஞர்கள் கருதியதாக கூறப்பட்டாலும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளில் ஒன்று (வலமிருந்து இடம்)
25 – 27 இசைவிற்கேற்ற பொருட்களில் அப்பிக்கொள்ளக்கூடிய தன்மை உள்ளதால் அப்பு என்ற சொல்லில் இருந்து இச்சொல் பிறந்ததாக அறியப்பட்டுள்ளது (குழம்பி வருகிறது)
31 – 33 உடல் வெப்பத்தை அகற்றி குளிர்மையாக்கும் பொருட்டே முந்தைய பெண்கள் இதனை பயன்படுத்தினர்

மேலிருந்து கீழ்

01 – 19 விசேட தன்மை
08 – 26 உடற்பயிற்சியை வலியுறுத்தும் காரணிகளுள் இதுவும் ஒன்று
04 – 16 வெப்ப நாடுகளில் அதிகம் காணப்படும் இதனை உண்டாக்கும் தொழில் நுட்பத்தை ஜப்பானியர்களே முதலில் கண்டு பிடித்தனர்
11 – 23 பசியுடன் கூடிய மரபுத்தொடர் ஒன்றுடன் தொடர்புடைய இது குறித்து நிற்பது நற்குணங்களை ஆகும் (கீழிருந்து மேல் )
23 – 35 நாகரீகப் பாணியான இது சில இனத்தவரின் சடங்காகவும் கடைப்பிடிக்கப் படுகிறது
18 – 36 இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்தவர்கள் எனப்படுபவர்கள்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 258 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கார்த்திகை
07 – 10 குற்றம்
15 – 17 நிழல்
19 – 22 கணக்கு
28 – 30 வாயில்

மேலிருந்து கீழ்

01 – 13 காற்று
13 – 31 கிறுக்கு
14 – 32 உணர்வு
15 – 33 நிகண்டு
22 – 34 குயில்
05 – 23 மல்லிகை
06 – 12 மாலை
18 – 36 செவ்வாய்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 258ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

செல்வி.அஞ்சனா குகன் சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 258ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!