Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 250 (02/02/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 250 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 08, 10, 21

இடமிருந்து வலம்

01 – 03 இலக்கை அடைவதற்கு முக்கியமானது
04 – 06 மங்களகரமான பொருட்களுக்காக பயன்படுத்தப்படும்
14 – 17 சமிக்ஞைகளுக்காக பயன்படுத்தப்பட்டது (வலமிருந்து இடம்)
22 – 24 செம்புலம் என அழைக்கப்படும் நிலப்பகுதி
26 – 28 பாரசீக வளைகுடாவில் அதிகம் காணப்படும் இவற்றுள் சில பெறுமதி மிக்க பலனை தரவல்லது
31 – 33 சூரியனை அடிப்படையாக கொண்டு கணிப்பிடப்பட்டவற்றுள் ஒன்று
34 – 36 தற்காலத்தில் பலரது விருப்பத்திற்குரியதான இது மன அழுத்தத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடியது

மேலிருந்து கீழ்

07 – 19 மாய மந்திரங்களின் விளைவாக பார்க்கப்படும் தந்திரம்
25 – 31 கிடைத்தற்கரியது எனினும் தற்காலத்தில் இலகுவில் கிடைப்பதாகவே கருத வேண்டியுள்ளது (கீழிருந்து மேல்)
14 – 26 கைநடுக்கத்திற்கான பயிற்சியான இது ஒரு வகை விளையாட்டு
03 – 09 இயற்கையின் படைப்பில் ஆண் பெண் இனக்கவர்ச்சியுடன் தொடர்புடையது (கீழிருந்து மேல்)
11 – 29 குறைப்பிரசவ குழந்தைகளிடம் இதனை அதிகளவு காணக்கூடியதாக உள்ளதென விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் (குழம்பி வருகிறது)
12 – 24 பாதிப்புகளின் வெளிப்பாடு
30 – 36 தொற்றுகள் மூலம் பரவக்கூடிய இது இரண்டெனவும் அர்த்தப்படும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல249 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 இரகசியம்
09 – 12 பல்லவி
14 – 16 நிறம்
19 – 22 கணக்கு
28 – 29 பூமி
31 – 34 வஞ்சம்
34 – 36 யோசனை

மேலிருந்து கீழ்

01 – 31 இலக்கணம்
02 – 20 காரணம்
14 – 32 வண்ணம்
09 – 21 விறகு
11 – 29 மின்னல்
06 – 30 பூகம்பம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 249ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மன்
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மன்
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ்வரன் , ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் , ஐக்கிய இராச்சியம்


வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 249 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!