Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 248 (19/01/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 248 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 30, 31

இடமிருந்து வலம்

01 – 05 நடைமுறைக்கு ஒவ்வாத அமைவிற்கு எதிரானது
09 – 11 எல்லை மீறும் போது தண்டனைக்குரியது (குழம்பி வருகிறது)
15 – 17 ஒன்றுடன் ஒன்றை பொருத்துதல் எனவும் பொருள் தரும் இது பாதுகாப்பிற்கானது (வலமிருந்து இடம்)
20 – 24 அதிக வேலைப்பழுவுடன் கூடிய விரைவான செயலுக்குரியவர்களுடன் ஒப்பிடப்படுவது (குழம்பி வருகிறது)
25 – 27 இலகுவில் பக்ரீரியாக்களின் தாக்கத்திற்குள்ளாகும் பகுதிகளுள் ஒன்று
27 – 29 தவத்திற்கான ஆரம்ப நிலை பயிற்சிக்குரியது (வலமிருந்து இடம்)
32 – 34 உயரத்தையும் வெப்பத்தையும் வைத்து இது வகைப்படுத்தப்படும்
34 – 36 நீரைத்தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மையற்றது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 07 போர்த்துக்கேய மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததான இது பிரபல எழுத்தாளரின் புனைபெயருக்கானது.
07 – 19 பயிலாமல் அடையும் ஞான வலிமை (கீழிருந்து மேல்)
02 – 20 மன அழுத்தம் மற்றும் மனநோய் வீதம் உயர்வடைய உலகளாவிய ரீதியில் முக்கிய காரணம் இது என அறியப்பட்டுள்ளது (குழம்பி வருகிறது)
20 – 32 விதம் என்னும் பொருளில் வரக்கூடிய இடைச்சொல் (கீழிருந்து மேல்)
03 – 15 சமபரப்புடன் ஒப்பிடும் போது சற்று மேடான பகுதி
12 – 24 அசாதாரண தன்மைக்குரிய நிகழ்வுக்கும் பொருந்தும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல247 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 தாலாட்டு
04 – 06 மாநாடு
09 – 12 குழந்தை
19 – 24 சுயம்வரம்
25 – 27 தேசம்
31 – 34 பதியம்
35 – 36 தறி

மேலிருந்து கீழ்

01 – 25 தாழ்வாரம்
02 – 20 சுற்றுலா
03 – 15 குட்டை
22 – 34 பழம்
17 – 29 கோலம்
24 – 36 தவறு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 247ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ்வரன் , ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் , ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 247 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...