வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 244 (08/12/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 244 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 22
இடமிருந்து வலம்
01 – 06 அன்பானவர்களின் ஆதரவு
08 – 09 மூலக்கருத்து
16 – 17 எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கும் தண்டனைக்குரியது (வலமிருந்து இடம்)
25 – 29 இன்றியமையாதது (வலமிருந்து இடம்)
31 – 33 அஸ்திரம்
மேலிருந்து கீழ்
01 – 25 நிஜத்தை மறைத்தல் எனவும் பொருள் தரும்
14 – 32 மனதுக்கு இனிமை சேர்க்க கூடியவற்றுள் ஒன்றான இது மரபுக் கலைகளுள் ஒன்று
03 – 21 வருமானம்
04 – 10 பதவியெனில் முதல் நிலைக்கு வரக்கூடிய நிலை (கீழிருந்து மேல்)
28 – 34 ஒரு வகைப்பொறி
11 – 29 கரிசனம் (கீழிருந்து மேல்)
29 – 35 தனித்தனி பிரிவு அல்லது தாக்குதலுக்கானது
06 – 18 சதுரங்க ஆட்டத்திலும் நகர்வது
18 – 36 அடிமைப் பட்டோரின் காத்திருப்பிற்கானது
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 243ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 05 நாட்டியம்
08 – 09 கேலி
10 – 12 நாணம்
22 – 23 பாடு
23 – 24 பால்
27 – 28 இலை
31 – 36 சாகுந்தலம்
மேலிருந்து கீழ்
01 – 13 நாகம்
13 – 31 சாசனம்
20 – 32 அழகு
09 – 15 வேலி
21 – 27 சேலை
04 – 16 பயம்
05 – 17 குணம்
23 – 35 பாலம்
18 – 36 செல்வம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 243 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.லாலா ரவி
திருமதி.ராதா கனகராஜா
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
ஜெயந்தி, ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன்
திருமதி.பேபி கணேஷ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 243 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!
பகிரவும்...