Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 203 (02/12/2018)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 203 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரம் : 35

இடமிருந்து வலம் 

1 – 6    வறியோரை எண்ணினால் வசதி படைத்தோர் தவிர்க்கலாம்

7 – 10  தசையுருவில் மட்டுமல்ல சில இசைக்கருவியிலும் உண்டு (குழம்பி வருகிறது)

13 – 16 நீரில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளை நீக்கவல்லது என்பதால் முன்னோர்கள் இதனை அதிகம் பயன்படுத்தினர்.

19 – 23 இரு பக்க சிக்கல்களை எதிர் கொள்வதன் உதாரணமாக அமையும் (குழம்பி வருகிறது)

25 – 28 பாரிய வீர தீர செயற்பாடு அல்லது தீவிர நடிப்பின் காரிய வெளிப்பாடு

31 – 34 இந்துமத இதிகாசங்களின் படி இனப்பெருக்கத்துக்கான சக்தி என அறியப்படும் இதன் இருப்பை கருப்பைக்கு ஒப்பிடுகின்றனர்.(குழம்பி வருகின்றது)

மேலிருந்து கீழ் 

1 – 13    பயிரிடுதல் என தமிழில் அர்த்தப்படும் இந்த இராகம் மனதில் நல்லெண்ணங்களை பயிற்றுவிக்கும் இரகம் என நம்பப்படுகிறது.

19 – 31  முனிவர்களின் கோபத்திலும் சில மூதாதையரின் பாவத்திலும் கிடைப்பது (குழம்பி வருகிறது)

8 – 32   போதிய அறிவுக்கும் பொழுது போக்கிற்கும் உரியது.

3 – 27   மறுதலிப்பிற்கு எதிரான இது சாதகமான பதிலளிப்பு (குழம்பி வருகின்றது)

21 – 33 இயந்திர உதிரிபாகங்களில் ஏற்படும் நிரந்தர தேய்மானத்தை சீர் செய்ய உதவுவது (பாடல் இல்லை)

11 – 29 விரைவாக வெப்ப மயமாவதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

6 – 36   சிலருக்கு வசந்த காலத்தை கசந்து போக வைக்கும் இது ஒவ்வாமைக்குரியது. (கீழிருந்து மேல்) 

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 202 ன் விடைகள் 

இடமிருந்து வலம் 

1 – 6     சரித்திரம்

7 – 9     முகம்

13 – 15 தாமரை

20 – 21 நீர்

27 – 30 இயற்கை

31 – 35 பாத்திரம்

மேலிருந்து கீழ் 

1 – 25   சமுதாயம்

8 – 26   தர்மம்

27 – 33 கைதி

4 – 22   திங்கள்

17 – 35 நியாயம்

6 – 30  இரத்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 202 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள் 

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பிறேமா கைலாயநாதன்,  பிரான்ஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. புஸ்பா இராஜேந்திரம், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. விஜயராணி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா,  பிரான்ஸ்

திருமதி. விஜி பாலேந்திரா,  பிரான்ஸ்

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம்,  சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி. பேபி கணேஷ், யேர்மனி

திருமதி. அகஸ் ரீனா கெனடி, முன்சன்கிளட்பாக் யேர்மனி

திருமதி. வெனிற்ரா தேவராஜா,  யேர்மனி

திருமதி. யசோ டிற்ரோ, செங்காளன் சுவிஸ்

திரு. சந்திரசேகரம் செல்லத்துரை, நோர்வே

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 202 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் ஆரம்ப நிகழ்ச்சி முதல் தற்போது வரை  இந் நிகழ்ச்சியூடாகப் பயணித்துக் கொண்டிருக்கும்  உங்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!