Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 202 (25/11/2018)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 202 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 11,36

இடமிருந்து வலம்

1 – 6     சாதித்த பெரியோரும் ஆதிக்கமுடையோரும் கூட இடம் பிடிப்பது.

7 – 9     மெய்யுமுண்டு.பொய்யும் இருக்கும் (குழம்பி வருகிறது)

13 – 15 கடவுளின் சிம்மாசனமும் கட்சியொன்றின் சின்னமும் நினைவுக்கு வரும்.

20 – 21 உடலிலும் உலக உருண்டையிலும் பெரும் பங்கு வகிப்பது (வலமிருந்து இடம்)

27 – 30 அழகு மயமான இறைவன் படைப்பு  (வலமிருந்து இடம்)

31 – 35 உணவுக்கும் உணர்வுக்கும் பொருந்தக் கூடியது.

மேலிருந்து கீழ் 

1 – 25   நாகரிக சுழற்சியின் படியும் நாளாந்த வளர்ச்சியின் படியும் மாற்றம் பெறுவது

8 – 26   வெல்லுமா என்பதை செல்லும் காலம் சொல்லும் (கீழிருந்து மேல்)

27 – 33 குற்றவாளிகள் மட்டுமல்ல குற்றமற்ற மற்றவரும் குறிப்பிட்ட சிலவற்றுக்கு ஆகலாம் (பாடல் இல்லை)

4 – 22  மலர்களுள் அல்லி விரும்புவது. மனிதருள் அநேகர் விரும்பாதது.

17 – 35 நீதியோடு உடன் பிறந்தது. அநீதியோடு உடன் படாதது.

6 – 30  மண் மீட்போடும் மருத்துவத்தில் மனித உயிர் மீட்புக்கும் தொடர்புடையது. (கீழிருந்து மேல்)

 

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 201 ன் விடைகள் 

இடமிருந்து வலம்

1 – 5    இல்லறம்

8 – 12  தெம்மாங்கு

21 – 23 காவல்

25 – 26 கனி

26 – 27 கலை

31 – 35 அற்புதம்

மேலிருந்து கீழ் 

1 – 19  இராகம்

8 – 32  தெய்வீகம்

27 – 33 அலை

22 – 34 காப்பு

11 – 35 தடங்கல்

18 – 36 இரசம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 201 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள் 

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி. பேபி கணேஷ், யேர்மனி

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பிறேமா கைலாயநாதன்,  பிரான்ஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. புஸ்பா இராஜேந்திரம், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. அகஸ் ரீனா கெனடி, முன்சன்கிளட்பாக் யேர்மனி

திருமதி. வெனிற்ரா தேவராஜா,  யேர்மனி

திருமதி. யசோ டிற்ரோ, செங்காளன் சுவிஸ்

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா,  பிரான்ஸ்

திருமதி. விஜி பாலேந்திரா,  பிரான்ஸ்

திருமதி . ரதிதேவி தெய்வேந்திரம்,  சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திரு. திருமதி. மல்லி உதயன், யேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 201 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் ஆரம்ப நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரை என்னுடன் இந் நிகழ்ச்சியூடாகப் பயணித்துக் கொண்டிருக்கும்  உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்!