வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 228 (09/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 227ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 14, 31
இடமிருந்து வலம்
01 – 05 சைவமதம் மிகத்தொன்மையானது என்பதற்கு சான்றாக எகிப்தில் இதற்கான ஒன்றின் பெயர் சிவன் என வழங்கப்படுவதையும் கூறலாம்
07 – 09 பலர் சில தவறான முடிவுகளை எடுக்க இதுவும் காரணமெனினும் குழந்தைகளுக்கே அதிகம் பொருந்தக்கூடியது
09 – 12 ஈழத்தமிழர் வரலாற்றில் அதி துயர் சுமந்த நினைவுகளுள் ஒன்று (குழம்பி வருகிறது)
15 – 18 இரு அளவுகளை ஒப்பிடுதல் எனவும் கொள்ளலாம்.(வலமிருந்து இடம்)
19 – 23 சில அல்லது பல இணையும் செயற்பாடு (குழம்பி வருகிறது)
26 – 30 சிக்கல்கள் அல்லது இன்னல்கள் போது அவசியமானது (ஒலிபரப்பாகும் பாடலில் வரும் சொல்லுடன் முதல் எழுத்து ஒன்றை இணைக்கும் போது இதற்கான விடை கிடைக்கும்) குழம்பி வருகிறது
32 – 35 ஒரு இனத்தையும் அதன் நிலத்தையும் குறிக்கும் இது உன்னதமானது
மேலிருந்து கீழ்
07 – 25 இதற்கான குறியீடுகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அறிமுகப்படுத்திய முதல் நாடு ஜேர்மனி
20 – 32 ஆன்மீகத்துக்கு மனபலம் அவசியம் எனினும் இதன் பலம் அத்தியாவசியம் என்பது சித்தர்களின் கூற்று
(குழம்பி வருகிறது)
04 – 22 புதுமையானவை அல்லது கிடைத்தற்கரியவை
(குழம்பி வருகிறது)
05 – 29 வட ஜேர்மனியின் குறிப்பிட்ட குழுமத்தினரின் பெயரிலிருந்து பெறப்பட்ட சொல் (கீழிருந்து மேல்)
06 – 12 நவீன நகைச்சுவை வடிவங்களில் ஒன்று (கீழிருந்து மேல் )
24 – 36 தியான முறைகள் பலவற்றுள் அடங்கும் பயிற்சிக்கானது (குழம்பி வருகிறது)
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 227 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 05 தாளலயம்
08 – 10 பாவம்
09 – 11 பாரம்
14 – 15 கோடி
20 – 22 சாதனை
26 – 27 பேதை
31 – 32 சீர்
33 – 36 வான்வெளி
மேலிருந்து கீழ்
01 – 25 தாம்பூலம்
26 – 32 பேர்
09 – 15 பாடி
10 – 22 தவம்
05 – 29 மின்சாரம்
06 – 24 பிறப்பு
24 – 36 புள்ளி
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 227ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி ஜெயசுதா ராஜன் யேர்மனி
திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்
திருமதி.சித்ரா பவன் , நோர்வே
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 227ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!