Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 224 (12/05/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 224 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 15

இடமிருந்து வலம்

01 – 06 உதிரம் சிந்தும் உத்தம வீரர்கள் , இங்கே விழுப்புண் கண்டு விதையாவதும் உண்டு
08 – 10 கொத்துக்கொத்தாய் கதிரழகு காட்டியது அன்று
சருகுகளானது கொத்துக் குண்டுகளால் இன்று (குழம்பி வருகிறது)
17 – 18 விண்ணகம் சென்றாலும் விடுதலை தோற்றாலும் விளையாடுதாம் இதுவென்று விடை காணும் , மனிதம்
19 – 21 அந்நியன் ஆதிக்கத்தில் எம்மினம் தொலைத்த பலவற்றுள் சில (குழம்பி வருகிறது)
27 – 29 பதிலுக்காக பலரையும் காத்திருக்க வைக்கும். எதிர் என்றும் ,வரும் என்றும்
31 – 34 முயற்சியின் இறுதியில் முத்தாய்ப்பாகும் வெகுமதி (வலமிருந்து இடம்)
34 – 36 அடக்கு முறைகளால் அமிழ்த்தப்படும் போது எதிர்த்து நின்று எதிர் பார்ப்பது

மேலிருந்து கீழ்

01 – 25 மண்ணிலும் மனதிலும் நடந்திடும், தீர்வதும் தீராததும்
02 – 14 சோகத்தின் எல்லையில் , சோர்வு தரும் பாதிப்பு (கீழிருந்து மேல்)
20 – 32 தரமான கதைகளும் கொண்டிருக்கும் இது வெகுவான பிரியத்துக்கும் பொருந்தும்
04 – 22 துயிலும் இல்லங்களில் துடைத்தெறியப்பட்டுள்ளன
11 – 29 இலக்கியங்களுக்கு மட்டுமல்ல சிலரின் இறப்புகளுக்கும் கூட உண்டு
06 – 24 பிரிவுகள் இதற்கு உண்டெனினும் , எதிரியாயினும் நிறத்தால் ஒன்றே (கீழிருந்து மேல்)
24 – 36 கற்பனை அல்ல

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 223 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சொர்க்கம்
07 – 09 பாடல்
10 – 12 அனல்
14 – 16 சுயம்
17 – 18 ஆலை
19 – 22 இரசனை
25 – 28 மன்றம்
32 – 34 கும்மி

மேலிருந்து கீழ்

07 – 25 பாயிரம்
02 – 14 சுடர்
20 – 32 இறகு
15 – 33 சமயம்
04 – 16 அகம்
17 – 35 ஆதாரம்
06 – 12 பல்
30 – 36 ஓசை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 223ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி.சித்ரா பவன் , நோர்வே
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திரு . திக்கம் நடா, சுவிஸ்
திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 223 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!