Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 223 (05/05/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 223ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 24,31

இடமிருந்து வலம்

01 – 05 புண்ணியங்களின் தீர்ப்பாக நம்பப்படுவது 

07 – 09 முற்காலங்களில் தொழிற்களங்களில் களைப்பைக் குறைப்பவற்றுள் ஒன்றாக அமைந்தது 

10 – 12 குறிப்பிட்ட ஓர் நோயின் பிரதி பலிப்பு

14 – 16 பொதுநலமற்றது 

17 – 18 சில வேளைகளில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதால் மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாவது 

19 – 22 அழகுடன் அல்லது ஆர்வத்துடன் தொடர்புடைய இது பலருக்கும் பல்வேறாக அமையும் 

25 – 28 குறிப்பிட்ட நபருக்கான அல்லது நோக்கத்துக்கானது (குழம்பி வருகிறது)

32 – 34 நாட்டார் கலைகளுள் ஒன்று 

மேலிருந்து கீழ்

07 – 25 தமிழ் இலக்கிய நூல்களில் முன்னுரையாக அமையும் 

02 – 14 மாவீரர்களுக்கான அஞ்சலியாகவும் அமையும் (கீழிருந்து மேல்)

20 – 32 வலியை ஆற்றவும் உதவும் 

15 – 33 ஆன்மிகம் சார்ந்து மனித செயற்பாடுகள் அமைய வழிகாட்டுவது (குழம்பி வருகிறது)

04 – 16 பழந்தமிழர் வாழ்வியலில் காதலையும் மணவாழ்வையும் குறிக்கும் இலக்கியத் திணை (குழம்பி வருகிறது)

17 – 35 அத்தாட்சிக்குரிய ஆவணம் அல்லது தேடலுக்கான அடிப்படை 

06 – 12 சிலவிற்கும் மேலான பல 

30 – 36 தமிழில்  மாத்திரையுடன் தொடர்புடையது  

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 222 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 தணிக்கை 

14 – 18 பல்லக்கு 

19 – 21 கல்வி 

26 – 28 அன்பு 

28 – 29 புல்

31 – 33 பச்சை 

34 – 36 முலாம் 

மேலிருந்து கீழ்

01 – 13 நாதம் 

13 – 31 பக்கம் 

03 – 21 விலக்கு

04 – 22 காணிக்கை 

11 – 23 எல்லை 

23 – 35 முல்லை 

06 – 18 பங்கு 

18 – 36 பதியம் 

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 222ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.லாலா ரவி பிரான்ஸ்
திருமதி.விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திரு . திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் ,ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் , சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 222 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!