Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 221 (21/04/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 221 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 13

இடமிருந்து வலம்

1 – 6 அவசியமாக பேணப்பட வேண்டிய தெனினும் மீறப்படுவதுமுண்டு
8 – 12 மனச்சோர்வு அதிகம் உள்ளவர்கள் இதற்கான பாதிப்புள்ளவர்கள் என்பது மருத்துவர்களின் கருத்து (குழம்பி வருகிறது)
15 – 18 பண்டைத்தமிழர் தமது போர்க்கடவுளாகிய முருகனுக்குரியதாக இதனை கருதியுள்ளனர் (வலமிருந்து இடம்)
22 – 23 ஆட்சி என்பதையும் குறிக்கும் (வலமிருந்து இடம்)
27 – 30 உமிழ்நீரினால் உறைவிடம் உருவாக்கும் (வலமிருந்து இடம்)
31 – 35 தலைமைத்துவம் இல்லாதவிடத்து நிகழக்கூடியது.

மேலிருந்து கீழ்

1 – 7 காக்கும் கவசமான இது நேர அளவுடனும் தொடர்புடையது
19 – 31 இயற்கை உரமாகவும் உதவும்
14 – 32 பிரபஞ்சத்திற்கு இல்லாதது (குழம்பி வருகிறது)
21 – 33 சொல்லின் செல்வன் என புகழப்பட்ட பாத்திரப்படைப்பு (குழம்பி வருகிறது)
10 – 22 மனோதத்துவ நிபுணர்களுக்கு ஒருவரின் மன எண்ணங்களை புரிந்து கொள்ள உதவும் பகுதி (பாடலில் ஒத்த கருத்துள்ள சொல் வருகிறது)
23 – 35 கலையுணர்வோடு உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தக் கூடியது
06 – 30 அழகு அல்லது ஒப்பனை (கீழிருந்து மேல்)
30 – 36 பலர் அவஸ்தைக்கு உள்ளாகினாலும் பலர் ஆடம்பரமும் அனுபவிப்பது

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 220 ன் விடைகள்

இடமிருந்து வலம்
01 – 05 பூர்வீகம்
09 – 12 சந்தம்
13 – 16 பொன்னாடை
26 – 27 வேலி
31 – 34 இலவம்

மேலிருந்து கீழ்
19 – 31 காயம்
02 – 20 பன்னீர்
21 – 22 வேர்
16 – 34 இரட்டை
05 – 29 சகவாசம்
29 – 35 சபை
06 – 30 சிந்தாமணி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 220 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் , சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் ,ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திரு . திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 220 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!